தமிழ் இனத்தின் இருப்பை நிலைநாட்ட ஒன்றிணைவோம் யாழ்.பல்கலை மாணவர் ஒண்றியம் எழுக தமிழுக்கு அழைப்பு

341 0

usu-852d-600x338தமிழ் சமூகத்தின் இருப்பினை நிலைநாட்டிக் கொள்ளவதற்கு அரசியல் கட்சி, பிரதேச பேதங்களை மறந்து தமிழர்களாக எழுக தமிழில் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக திமிழ் பேரணிக்கான ஆதரவினை வழங்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது அன்றைய காலம் முதல் இன்றுவரை தமிழ் நலன் சார்ந்தும் தமிழ் சமூகத்தினது நியாயமான கோரிக்கைகள் சார்பாகவும் குரல் கொடுத்து வரும் ஓர் அமைப்பு என்பது யாவரும் அறிந்ததே.

அந்த வகையில் எதிர்வரும் 24.09.2016 சனிக்கிழமை அன்று இடம் பெறவுள்ள எழுகதமிழ் நிகழ்வானது தமிழ் மக்களின் இன்றைய காலகட்டத் தேவைப்பாடுகளை கருவாகக் கொண்ட கோரிக்கைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையினை நாம் தெளிவாக உணர்ந்துள்ளோம்.

அத்தோடு அனைத்து தமிழ் மக்களும், தமிழ் சிவில் அமைப்புக்களும் இப் பேரணிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமையானது மகிழ்வளிக்கின்றது.

அத்தோடு எம் யாழ்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கமும், ஊழியர் சங்கமும் ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் மாணவர்களுக்கான பீடங்களின் ஒன்றியத்தினர்களாகிய நாமும் பல்கலைக்கழக சமூகமாக இணைந்து இப் பேரணிக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளோம்.

எனவே எம் சமுகத்தினது இருப்பினை நிலைநாட்டிக் கொள்ளவும், எமது கோரிக்கைகளை ஒற்றுமையாக அரசிற்கும் சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தவும் அரசியல் கட்சி பிரதேச பேதங்களை மறந்து தமிழர்களாக முற்றவெளியில் ஒன்றிணையுமாறு அனைத்து தமிழ் மக்களையும் வேண்டி நிற்கின்றோம்.

2015 – 2016ம் ஆண்டுகளிற்கான மாணவர் ஒன்றியத்தினுடைய பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் 2016 – 2017ம் ஆண்டுகளிற்கான புதிய மாணவர் ஒன்றியம் இன்னமும் அமைக்கப்படாமலுள்ளது. எனினும் பீடங்கள் தமது புதிய மாணவர் ஒன்றியங்களை அமைத்துள்ள நிலையில் புதிய பீடங்களின் மாணவர் ஒன்றியங்கள் இணைந்து யாழ் பல்கலைக்கழக இணைந்த பீடங்களின் ஒன்றியங்கள் என்ற வகையில் இவ் அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.