தமிழ் அரசியல்கைதிகள் நிபந்தனைகளுடன் போராட்டத்தை கைவிட்டனர்!

93 0

கடந்த 14 ம் திகதி முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் போராட்டத்தை  நிபந்தனைகளுடன் தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர்.

கடந்த 14 ம் திகதி முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் போராட்டத்தை  நிபந்தனைகளுடன் தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர்

இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட பல்கலைகழக மாணவர்கள் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின்  ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் ஆகியோரை சந்தித்த பின்னர் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்

எதிர்வரும் 17 ம் திகதி  அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஜனாதிபதியிடமிருந்து வெளியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்குறுதியளித்துள்ளதன் காரணமாக எதிர்வரும் 17 ம் திகதி வரை தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக  தமிழ் அரசியல் கைதிகள் அவர்களை சந்தித்த அருட்தந்தை சக்திவேல் அடங்கிய குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்

மேலும் அவர்கள் அருட்தந்தை சக்திவேலிடம் பழரசத்தை வாங்கி அருந்தி தங்கள்  போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர்

இதேவேளை கூட்டமைப்பு வாக்குறுதியளித்தபடி ஜனாதிபதியிடமிருந்து உறுதியான முடிவு புதன் கிழமை வெளியாகவிட்டால் அதன் பின்னர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்

இம்முறை பலர் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க மருத்துஉதவிகளை பெற்று போராட்டத்தை பெற்றுக்கொண்ட நாங்கள் எதிர்காலத்தில் மருத்துஉதவிகளையும் மறுத்து போராட்டத்தை தொடர்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இன்று காலை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவும் சிவமோகனும் தங்களை சந்தித்து எதிர்வரும் புதன் கிழமை  உறுதியான முடிவை வழங்குவார் என தெரிவித்ததாக அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்

தமது விவகாரத்திற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின்போது அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என தாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 107 அரசியல் கைதிகளையும் தரம்பிரிக்காது விடுவிக்கவேண்டும் அதில் ஏதாவது சிக்கல் இருந்தால் குறுகியகால புனர்வாழ்வுடன் விடுதலை செய்யவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்

Leave a comment

Your email address will not be published.