இலங்கையின் கல்வித்திட்டம் நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பாடத்திட்டத்தை மாற்றுதல் மற்றும் பொருள் உள்ளடக்கங்களில் திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

