மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம் – ஐ.நாவில் ஜனாதிபதி

319 0

maithiri_un_001-436x360மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நாடாக இலங்கையை மாற்றுவதே தமது இலக்கு என்றும் அவர் குறுpப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

நியுயோர்க்கில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை அரசாங்கத்தின் நகர்வு தொடர்பில் ஜோன் கெரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் அனைத்து படிகளுக்கும் கூடுமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கம் மறுசீரமைப்பையும், பொருளாதாரத்தையுமு; ஒருசேர வளர்ச்சியடைய செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.