லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 12ம் திகதி

188 0

சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 12ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அந்த மனு நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் அசல வெங்கப்புலி ஆகியொர் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருக்கின்ற அந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் அன்றைய தினம் மேன்முறையீட் நீதிமன்றில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் கடுமையான உழைப்புடன் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment