மத்திய வங்கி பிணைமுறி விகாரத்தில் மோசடி ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுப்பதற்கு இடமளிக்க முடியாது.
எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும். பதவி விலகாவிடத்து அவரை பதவி நீக்குமாறு கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என். எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அவ்வெதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

