இறுதி யுத்தத்தின் போது நானோ மகிந்தராஜபக்சவோ கோத்தபாய ராஜபக்சவோ ஓடி ஒழியவில்லை!

25624 112

இறுதி யுத்தத்தின் போது நானோ மகிந்தராஜபக்சவோ  கோத்தபாய ராஜபக்சவோ ஓடி ஒழியவில்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்ச இராணுவ தளபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர் என ஜனாதிபதி சிறிசேன நியுயோக்கில் தெரிவித்துள்ள கருத்து குறித்து பதில் அளிக்கையிலேயே சரத்பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளை கவனம் செலுத்தவேண்டிய பல விடயங்கள் உள்ளன என தெரிவித்துள்ள இராணுவதளபதி வெறுமனே தாக்குதல் குறித்து மாத்திரம் கவனம் செலுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியது சிரேஸ்ட தலைவர்கள் அதிகாரிகளின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா இதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி யுத்தத்தின் இறுதிவாரங்களில் நாட்டை விட்டு வெளியேறினார் நான் சீனாவிற்கு சென்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

யுத்தத்தை இரண்டு வாரங்களில் தீர்மானித்து விட முடியாது  இறுதி இரண்டு வாரங்களில்  மேற்கொள்ள வேண்டியிருந்த தாக்குதல்களை சாதாரண சிப்பாயால் கூட செய்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment