அமைச்சரவையை 25 பேராக ஆக மாற்றி, இராஜாங்க அமைச்சு நீக்கப்படல் வேண்டும்- எரான்

984 26

நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை எத்தனையென தம்மால் கூற முடியாதுள்ளதாகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தான் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுள்ள நிலையிலும், இந்த அமைச்சுக்கள் நாட்டுக்குத் தேவையற்றது என்பதைக் கூறத் தயங்குவதில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்கள் சகலரினதும் நலனுக்காக இந்த முறைமை நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment