பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில் (காணொளி)

363 0

pillaijan

pillaijanபிள்ளையான் எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா எதிர்வரும் 05 ஆம் திகதிவரையில் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவினை இன்று பிறப்பித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.