“சங்கானைக் கோட்டை“ பாதுகாக்கப்படுமா?

67 0

யாழ்ப்பாண மாவட்ட வலி வடக்கு பிரதேசமான சங்கானையில் “சங்கானைக் கோட்டை” அல்லது ‘டச்சுக் கோட்டை” என அழைக்கப்படும் ஒல்லாந்தர் காலத்து தேவாலயக் கட்டிடம் காரை நகர் வீதியில் அமைந்துள்ளது.

இத் தேவாலயமானது ஒல்லாந்தர் கால கலை மரபில் அமைக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தக்கலை மரபினை பிரதிபலித்து நிற்கின்ற இத் தேவாலய கட்டிடத்தை பாதுக்க வேண்டியது அவசியமாகும்.

தற்போது இத் தேவாலயம் உரிய முறையில் பாதுகாக்கப்படாமல் உள்ளது. இதன் சுவர்களில் காதல் ஜோடிகள் தமது பெயர்களை எழுதுகிறார்கள்.

இளைஞகள் மறைந்திருந்து மதுபாவிக்கும் இடமாகவும் இது விளங்குகின்றது. குறித்த இத் தேவாலயத்தை சுற்றி குப்பைகள் காணப்படுகின்றன.

இத் தேவாலயமானது தொல்லியல் திணைக்களத்தினால் 2007.02.23 திகதி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பதிவு இலக்கம் 1986 ஆகும். ஆனால் இத் தேவாலயம் கவனிப்பார் அ்ற்று காணப்படுகின்றது.

உரிய முறையில் பராமரித்தால் சுற்றுலா தளமாக மாற்றி வருமானத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

 

Leave a comment

Your email address will not be published.