அரசியலமைப்புப் பேரவையில் பதவிக் காலம் நிறைவு

381 0

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையின் உத்தியோகபூர்வ காலம் நேற்றுடன் (21) நிறைவடைந்துள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் அங்கத்துவம் பெற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரிலியல்ல ஆகியோர் தொடர்ந்தும் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அண்மையில் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட மஹிந்த சமரசிங்கவின் காலமும் நிறைவடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் ஏனைய உறுப்பினர்களான திலக் மாரப்பன, டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் உறுப்புரிமைக் காலம் நிறைவடைவதாக  நீல் இத்தவல மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ள சிவில் சமூக உறுப்பினர்கள் மூவர் குறித்து இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

Leave a comment