டொலரின் விலை 170 ரூபாவைத் தாண்டியது

826 0

இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும் (21) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 170.65  ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்தவகையில் கடந்த 18 ஆம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் ஒவ்வொரு நாளும் டொலரின் விலை அதிகரித்து வந்துள்ளது.

இலங்கை வரலாற்றில் டொலர் ஒன்றின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளமை இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு டொலரின் விலை அதிகரிப்பினால் இலங்கை செலுத்த வேண்டியுள்ள கடன் தொகையும் அதிகரித்துள்ளதாகவும் பொருளியல் விமர்ஷகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்தும் நான்காவது நாளாகவும் டொலரின் விலை அதிகரித்துள்ளமை பொருளாதார ஸ்தீரமற்ற நிலைமையை எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை  நேற்று முன்தினம் 20 ஆம் திகதி 168.63 ரூபாவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment