அமெரிக்காவுக்குப் பயணமானார் ஜனாதிபதி!

2767 63

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச் சபை மாநாடு உள்ளிட்ட அரசாங்க வைபவங்கள் பலவற்றில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (22) ஐக்கிய அமெரிக்காவுக்குப் பயணமானார்.

எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள, போதைப்பொருள் பிரச்சினை தொடர்பாக, உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கான சந்திப்பிலும், ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

அன்றைய தினம் இடம்பெறவுள்ள நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலும், ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். அந்த மாநாட்டில், ஜனாதிபதி உரை நிகழ்த்துவதோடு, எதிர்வரும் புதன்கிழமை,  நோய் தொடர்பான விசேட செயலமர்விலும் பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இலங்கை தொடர்பில் புதிய நிதியமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கை,  கைச்சாத்திடும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

27ஆவது சர்வதேச தொற்றா நோயைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வெற்றி குறித்து கண்டறியும் பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள உள்ள ஜனாதிபதி இதன்போது விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்டுள்ள பாதிப்புத் தொடர்பான பிரதிபலன்கள் தொடர்பான மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

Leave a comment