வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க 9000 மில்லியன் ரூபா -சிறிசேன

988 0

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் நான்கு இலட்சத்து இருபத்திரண்டாயிரம் மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்குவதற்காக மட்டும் அரசாங்கம் ஒன்பதாயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த நிவாரண உதவி நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

எல்லங்கா நீர்ப்பாசன புனரமைப்பு திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மஹவிலச்சிய நபடகஸ்திகிலிய குள புனரமைப்பு பணி நேற்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் இருப்பதாக புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன இந்த நிலைமைக்கு முகம்கொடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அரசாங்கம் முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

வரட்சி நிவாரண நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி  2012ஆம் ஆண்டு வட மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட வரட்சியின்போது அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களை பிரசுரித்தபோதும் அம்மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்கவில்லை

கடந்த 2016 – 2017ஆம் ஆண்டுகளில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வரட்சியினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தற்போதைய அரசாங்கம் 15,000 மில்லியனுக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளது. என தெரிவித்தார்.

Leave a comment