திருகோணமலை எண்ணெய்குதங்களை இந்தியாவுக்கு இரகசியமாக வழங்க நடடிக்கை – அனுர

206 0

திருக்கோணமலை எண்ணெய் குதங்களை எந்தவித முன் அறிவித்தலும் இல்லாது இந்தியாவிற்கு வழங்கும் இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கபட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் குற்றம் சுமத்தினார்.

இந்த அரசாங்கத்தில்  தரகர்களின் அமைச்சரவையாக உள்ளமையாலேயே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் எனவும் அவர் சாடினார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளைகள்  27/2 கீழ் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திச்சாநாயக்க, பெற்றோலியவள அமைச்சர் அர்ஜுன ரணத்துங்கவிடம்  எழுப்பிய கேள்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

திருகோணமலை சீனக்குடா துறைமுகத்திலுள்ள எண்ணெய் குதங்களில் 15 எண்ணெய் குதங்களை முற்று முழுதாக இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிறுவனமொன்றுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும், 85 எண்ணெய் குதங்களை இலங்கை – இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனங்களின் கூட்டு நிறுவனமொன்றிற்கு  பெற்றுக்கொடுக்கவும் அமைச்சரவையில்  கடந்த மாதம் தீர்மானமொன்றை  எடுத்திருந்தது.

அதன் அடிப்படையில் 16 எண்ணெய்க் குதங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் நிர்வகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன.

Leave a comment