டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் இலங்கையை விட இந்தியாவிற்கே பாதிப்பு-ரணில்

13606 0

டொலரின் பெறுமதி உயர்வினால் எமது நாட்டை விட இந்தியாவே வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருகின்ற அதேவேளை ஏனைய நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவ்வாறானதொரு நிலையிலும் கூட கல்விக்கான செலவுகளை நாம் அதிகரித்தவாறே இருக்கின்றோம். கல்வி அபிவிருத்திக்கான செலவுகள் சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடு என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு தாருஸ்லாம் கல்லூரிக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டடத்தின் திறப்புவிழா இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment