வரட்சியினால் விவசாய உற்பத்தி பிரதேசங்கள் கடுமையான பாதிப்பு- துமிந்த திஸாநாயக

341 0

இயற்கை  அனர்த்தங்களினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய அரசாங்கமே  முழுமையான நிவாரணம் வழங்கியுள்ளது என்று   உறுதியாக குறிப்பிட முடியும் என  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  துமிந்த திஸாநாயக  தெரிவித்தார்.

அனர்த்தம்   இடம் பெற்றதன்  பின்னர்  அதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அனர்த்தம் ஒன்றினை  தயார் நிலையுடன்  எதிர்கொள்வது  தொடர்பில் தற்போது புதிய நவீன செயற்திட்டங்கள்  அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக   நாடுதழுவிய ரீதியில் இடம் பெறுகின்றன என தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில்  இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்   மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலையின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  விவசாய உற்பத்தி பிரதேசங்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.

அநுராதபுர மாவட்டம்,வடக்கு  பிரதேசங்கள்  அதிக வறட்சிக்குற்பட்டுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு போக  நெல்விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அநுராதபுர பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்படுகின்றது. இதற்காக  700மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அநுராதபுர மாவட்டத்தில் மாத்திரம்  ஒரு இலட்சத்து 23ஆயிரம் குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டள்ளனர்.  இன்று  இம்மாவட்ட பிரதேச செயலகத்தின் ஊடாக நிவாரனம் வழங்கப்படவுள்ளது.

Leave a comment