தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி “பொங்குதமிழ்”- 17.09.2018

4 0

ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள்!!

சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்டதுடன்; தங்கள் தேசத்தின் மீதான பற்றுருதியை மீண்டுமொருமுறை அனைத்துலகத்திற்கு இடித்துரைத்தார்கள்.
17.09.2018 திங்கட்கிழமை அன்று சுவிஸ் நாட்டின் ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட பொங்குதமிழ் கவனயீர்ப்பு பேரணியானது உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட உரிமைக்குரலாக ஒலிக்க, அவர்கள் தாங்கிய பதாகைகள் மூலம் வேற்றின மக்களுக்கு எடுத்துரைத்து, நகர்ந்து ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது.

பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய ஒன்றுகூடலானது தமிழீழத் தேசியக்கொடி வானுயர ஏற்றப்பட்டு, தியாக தீபம் லெப். கேணல் திலீபன், ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்தலுடன் அகவணக்கம் மலர்வணக்கத்துடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
புலம்பெயர் நாடுகளில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்தாலும் தமது வேர்களைத் தேடி அதன் இருப்புக்காக உரத்துக் குரல்கொடுத்த தமிழ் இளையோர்களின் பங்கு இப்பேரணியில் சிறப்பாக அமைந்ததுடன் தமது வாழிட மொழிகளில் புலமைத்துவத்துடனும், ஆளுமையுடனும் ஆற்றிய உரைகளுடன், சமகால கருப்பொருளை உள்ளடக்கியதான வாள்ப்பாணம் கருத்துவெளிப்பாடானது மக்களின் மனதை கனக்கவைத்தது.

குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து பல நாடுகளுக்கூடாக மனிதநேயப் பிரச்சாரப் பயணங்களை ஈருருளி மற்றும் ஊர்திகள் மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் தாம் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரமுகர்களிடம் வரலாறு தங்களுக்கு வழங்கிய கடமையின் நோக்கத்தை எடுத்துரைத்ததோடு, பொங்குதமிழ் பேரணியின் போது ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்தில் அரசியற் சந்திப்பும் நடைபெற்றதுடன் பேரணி தொடர்பாக கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையும், இன்றும் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் பேசப்பட்டது.

தமிழீழம் என்ற தேசம்தான் தங்கள் வாழ்வை வளமாக்கும் என்பதிலே உறுதி கொண்டிருந்த மக்கள், தேசத்தை மீட்டெடுக்க எல்லாவித அர்ப்பணிப்புக்களையும் செய்யத் தயாராக இருப்பதாக தமிழீழத் தேசியத் தலைவருக்கும், மாவீரர்களுக்கும் உறுதி வழங்கி நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்துடன,; தணியாத தாகத்துடனும் மாவீரர் நாமத்துடனும் கலைந்து சென்றனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

Related Post

யாழ்.உடுப்பிட்டி பகுதியி தோட்டக் கிணற்றில் இருந்து பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்பு (படங்கள் இணைப்பு)

Posted by - July 4, 2016 0
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி வல்வை வீதியில் உள்ள தோட்டக் கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையாக வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில்…

பாராளுமன்றத்தைக் கலைப்பதை உயர்நீதிமன்றம் எந்தக் கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளாது-சுமந்திரன்

Posted by - November 10, 2018 0
பாராளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குப் செல்வோம். அது தொடர்பான அரசமைப்பு ஏற்பாடுகள் பளிங்கு போல தெளிவானவை. இதைத் தவறாக அர்த்தப்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைப்பதை…

விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியது- அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

Posted by - May 1, 2017 0
விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியிருக்கிறது. அதை எமது திணைக்களம் செய்து முடித்திருப்பதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…

உலகத்தமிழர் உள்ளங்களில் நிலைத்துவாழும் ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் அவர்கள்- தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - July 15, 2017 0
தமிழீழ உணர்வாளரும் ஓவியவேங்கையுமான வீரசந்தானம் ஐயா அவர்கள் 13.07.2017 காலமானசெய்தி தாயகத்திலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ்மக்களுக்கும் துயரளிப்பதாகவே உள்ளது. தொடக்ககாலம்முதல் தமிழீழத்தேசியத்தலைவர் அவர்களையே தனது மானசீகமான…

அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம் – அனந்தி

Posted by - October 11, 2018 0
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று அனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில்…

Leave a comment

Your email address will not be published.