மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு ஆட்சிக்குவர இடமளிக்கப்படமாட்டாது – சம்பிக்க ரணவக்க

15086 283

champikka-ranawakkaஎதிர்வரும் தேர்தல்களில் ஜாதிக ஹெல உறுமய கட்சியே ஆட்சியை தீர்மானிக்கும் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு ஆட்சிக்குவர இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி குடும்ப அரசியலில் இருந்து விலகி ஜனநாயக தன்மை கொண்டதாக மாற்றம் பெறவேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சி தமது ஜனநாயக தன்மையை நிலைநிறுத்த வேண்டும்.
தாம் சிறந்த ஒரு ஜனநாயக கட்டமைப்பை நாட்டில் உருவாக்க போவதாக அவர் தெரிவித்;தார்.
அது மட்டுமின்றி 2020ஆம் ஆண்டில் யார் ஜனாதிபதி? என்பதையும் யார் ஆட்சி அமைப்பது? என்பதை தமது கட்சியே தீர்மானிக்கும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment