144 தடையுத்தரவு நீடிப்பு

342 0

police-kerala-120916-seithyindiaதமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கிடையிலான காவிரி தண்ணீர் பிரச்சினை தொடர்பில் கர்நாடகாவில் நடைப்பெற்று வரும் ஆர்பாட்டத்தையடுத்து பெங்களூரில் விடுக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் 2 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து தினமும் 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறன.

கடந்த 12ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது தமிழகத்துக்கு சொந்தமான பேருந்துகள், பாரவூர்திகள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றிற்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இதையடுத்து இருமாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைப்பட்டது.

இதன்காரணமாக பெங்களூரில் 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் 144 தடை உத்தரவு எதிர்வரும் 25ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.