மஹிந்த ராஜபக்ஷ கனவு காண்கின்றார்-துமிந்த

21 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடக்காத ஒன்றை நினைத்து கனவு காண்கின்றார். நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி பேசும் அவருடைய கருத்துக்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது பற்றி கவலையடையவும் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தனது சகோதரர்களில் ஒருவர் நியமிக்கப்படுவார் என இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு போதும் இடம்பெறாது. மீண்டும் ஒரு குடும்ப ஆட்சியை உருவாக்குவதற்கு பொது மக்கள் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை.

இது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஊடக சந்திப்பொன்றில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நிலைபாடும் அதுவாகவே காணப்படுகின்றது. மீண்டும் குடும்ப ஆட்சியை உருவாக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். நடைபெறாத ஒரு விடயத்தை நினைத்து அவர் கனவு காண்கின்றார்.

Related Post

மஹிந்தவின் புதிய பிரவேசம்! ஐ.தே.க உறுப்பினர்கள் ஆதரவு!!

Posted by - November 2, 2016 0
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதிய அரசியல் சக்திக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் – சட்ட மா அதிபர்

Posted by - September 7, 2018 0
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழீழ விடுதலை…

போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

Posted by - November 17, 2018 0
மினுவங்கொட பகுதியில் 4008 ட்ரமடோல் மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 22, 48 மற்றும் 37 வயதுடைய ராகம மற்றும் கொட்டுகொட பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது…

பிறந்து 11 நாட்களில் ஆன் குழந்தையை தூக்கி எறிந்த தாய்

Posted by - September 14, 2017 0
அனுராதபுரம் புளியங்குளம் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவின் நீர்த்தொட்டிக்கு அருகில் இருந்து நேற்று முன்தினம் 11 நாட்களே கடந்த ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அக்குழந்தையை…

முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய இறைவரி – ரணில் விக்கிரமசிங்க

Posted by - November 16, 2017 0
இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய இறைவரி சட்டத்தின் கீழ் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published.