எரிபொருள் சூத்திரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை- மைத்திரிபால சிறிசேன

39 0

எரிபொருள் விலையைத் தீர்மானிப்பதற்கு விலைச் சூத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், அது அமுலுக்கு வந்த நாள் முதலே எரிபொருள் விலை அதிகரித்துச் செல்வதே இடம்பெற்று வருவதாகவும் விலைக் குறைவை ஏற்படுத்த வில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இன்று (14) காலை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலைச் சூத்திரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துடன் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உலக சந்தையில் இடம்பெறும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப உள்ளுர் சந்தையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே விலைச் சூத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், விலை அதிகரிப்பு மாத்திரமே அதனூடாக இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தனக்கு அது தொடர்பில் உடன்பாடு இல்லாதுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.