ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் இருவர் நியமனம்!

208 0

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்த தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக சட்டத்தரணி உபாலி மொஹொட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

அதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக எச்.டபிள்யு.குணசேன நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

Leave a comment