முத்துராஜவெல எண்ணெய்க் கசிவு ; விசாரணைக்காக விசேட குழு!

191 0

கடலிலிருந்து முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்ட குழாயில் ஏற்பட்ட கசிவு தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருள் கொண்டுவரப்பட்ட கப்பலிலிருந்து அவை இறக்கப்படும் சந்தர்ப்பத்தில், குழாயில் கசிவு ஏற்பட்டது இதனையடுத்து உஷ்வெட்டகெய்யாவ முதல் பமுனுகம வரையான கடற் பகுதிகளில் தொன் கணக்கான எண்ணெய் கடலில் கந்தது.

இந் நிலையிலேயே பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த பிரிநிதிகளை கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பெற்றோலிய வளளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க, அந்தக் குழுவின் அறிக்கையை இரண்டு வார காலத்திற்குள் பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை எண்ணெய் கலந்து கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த துப்புரவு பணிகள் 70 சதவீதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் துப்புரவு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment