ஊழல், மோசடிகள் மற்றும் ஏனைய தேவையற்ற விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணை- ராஜித

12880 226

சுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் மற்றும் ஏனைய தேவையற்ற விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

விசாரணை பிரிவின் நடவடிக்கை முறையாக முன்னெடுப்பது தொடர்பில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் முறையற்ற செயற்பாடுகள், கடமை நேரங்களின் போது தனியார் மருத்துவ நிலையங்களில் கடமையாற்றுதல், இலவசமாக வழங்கப்படும் மருத்துவ நடவடிக்கைகளை வழங்காமை தொடர்பில் இரகசியமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளமாறு அவர் இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

Leave a comment