புதிய புகையிரத பெட்டிகள் கொள்வனவு செய்ய ஒப்பந்தம்

337 0

160 புதிய புகையிரத பெட்டிகள் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், இந்தியாவின் கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ், 160 புகையிரத பெட்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இவற்றைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் அந்த புகையிரத பெட்டித்ச் தயாரிப்பு நிறுவனத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கு இடையில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

இவற்றைக் கொள்வனவு செய்வதற்காக 82.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படவுள்ளது.

இப்பெட்டிகள், நவீன வசதிகளைக் கொண்டதாக அமையவுள்ளதுடன், எதிர்வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் இவை பயணிகள் போக்குவரத்துக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் போது, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்க ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

Leave a comment