ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபடுவோம் : த.தே.கூ

217 0

இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

 

ஜனாதிபதியின் குறித்த நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளுடனும் இராஜ தந்திர தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் யுத்தக்குற்றம் இளைத்த இராணுவத்தினர் மீது விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற ஐ.நா.தீர்மானத்தில்  எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களையும் கூட்டமைப்பு மேற்கொள்ளாது,

என்பதுடன் அத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் காத்திரமான பங்களிப்பு செலுத்துவோம் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளதாகவும் அதன்போது இராணுவத்திற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக புதிய யோசனை ஒன்றை முன்வைப்பதற்கும் தாம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment