இலங்கை  மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப்பயிற்சி

205 0

திருகோணமலை – சீன குடா ஆழ் கடல் பரப்பில் இலங்கை  மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப்பயிற்சி நாளை ஆரம்பிக்கப்பட உள்ளது.

கடல் ரோந்து பயிற்சிகள் மற்றும் கண்காணிப்பு – மீட்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய இரு கட்ட பயிற்சிகளாக தொடர்ந்தும் 6 நாட்கள் இடம்பெறவுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையிலான கடற்படை கூட்டுப்பயிற்சியானது  இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையே இடம்பெற்று வந்தது. ஆனால் இலங்கை இந்திய இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளுக்கு அமைவாக ஓவ்வொரு வருடமும் மேற்படி கூட்டு பயிற்சியை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் மற்றும் கடல் என்ற  தொனிப்பொருளின் கீழ்  இரண்டு கட்டங்களாக  இந்த கூட்டு பயிற்சி இடம்பெறவுள்ளது

Leave a comment