கிரிபாவை – சந்தகல – யாய பஹ பிரதேசத்தில் தந்தையொருவர், தனது மகனை மண்வெட்டியால் தாக்கி, கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் (05) இரவு, குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகனுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அருகிலிருந்த மண்வெட்டியால், மகனை பலமாகத் தாக்கிவிட்டு, குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் குறித்த நபர் தொடர்பில் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

