ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

219 0

வடமேல் மாகாண சபை தேர்தலின் போது சதொச நிறுவனத்தின் பணத்தினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரை வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் குருநாகல் மேல்நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறும் அதுவரை பிரதிவாதிகளை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் அவரது பிரத்தியேக செயலாளர் மொஹமட் ஷகீர் மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் சதொச நிறுவனத்தின் அப்போதைய கணக்காய்வாளராக இருந்த பொதேஜு என்பவரால் சாட்சி அளிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் யந்தம்பலாவ சதொச கிளையிலிருந்து பெற்றுக்கொண்ட பொருட்களுக்கு அரச பணத்தினை பயன்படுத்தியமை தொடர்பில் குறித்த மூவருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment