யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியில் விபத்து

220 0

யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தம் இன்று அதிகாலை மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment