தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாதாளக் குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றதென, அமைச்சர் பீல்ட் மார்சல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போது, பாதாளக் குழுவினராக பிரபல்யம் பெற்றுள்ளவர்கள் அனைவரும், கடந்த 10 வருட காலப்பகுதியில் உருவானவர்களெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேரர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பது இந்த அரசாங்கத்தில் மட்டுமல்ல கடந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்பட்ட விடயமென்றும், தான் சிறையில் அடைக்கப்பட்ட போது, சுமார் 90 தேரர்கள் சிறைத் தண்டனைப் பெற்று சிறையில் இருந்தனரெனவும் அமைச்சர் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

