கோதுமை மாவுவின் விலையை இன்று (01) அதிகரிப்பதற்கு பிரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நேற்று (31) நள்ளிரவு முதல் ஒரு கிலோ கோதுமை மாவுவின் விலை 5.00 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால், ஒரு கிலோ கோதுமை மாவுவின் சில்லறை விலை 95.00 ரூபாவிலிருந்து 100.00 ரூபாவாக உயர்கின்றது.
கோதுமை மாவு இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரி அதிகரித்தமை மற்றும் டொலரின் விலை அதிகரித்தமை என்பன இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் எனவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

