அக்கரைப்பற்று ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பழம்பெரும் பிள்ளையாரின் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆலய தீர்த்தக் கிணற்றிலிருந்தே சிலை மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
ஆலயத்தில் இருந்த இச் சிலை சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக ஆலய நிருவாகத்தால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் மாலை பொலிஸார் ஆலய தீர்த்த கிணற்றை இறைத்து சோதனை செய்த நிலையில் குறித்த சிலை மீட்கப்பட்டது.
இதேவேளை சிலை காணாமல் போனது தொடர்பில் பல்வேறு சந்தே கங்கள் எழுந்துள்ள நிலையில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

