ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கை கரையோர பாதுகாப்பு படைக்கு 2 கப்பல்கள் அன்பளிப்பு

266 0

இலங்கை கரையோர பாதுகாப்பு படைக்கு ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இரண்டு ஆழ்கடல் ரோந்துப் கப்பல்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

ரோந்துப்பணி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடல் மாசடைதலை தடுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ள சமுத்திரா ரக்ஷா மற்றும் சமாராஷா ஆகிய இரண்டு ரோந்துக் கப்பல்களும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான JICA வினால் இலங்கை கரையோர பாதுகாப்பு படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஜப்பானின் வெளிவிவகார இராஜங்க அமைச்சர் கஸுயுகி நாகேனி (Kazuyuki Nakane), இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகுனுமா (Kenichi Suganuma) பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி, விமானப்படை தளபதி, இலங்கை கரையோர பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment