கோபி அன்னான் உடல் செப்.13-ம் தேதி அடக்கம்

36765 0

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம்பர் 13-ம் தேதி அடக்கம் செய்யப்படும் என கானா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில்  8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார்.

2001-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஐ.நா.சபையுடன் பகிர்ந்துகொண்ட கோபி அன்னான், ஓய்வுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவுக்கு அருகாமையில் உள்ள பெர்ன் என்னும் இடத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 18-ம் தேதி தனது 80-ம் வயதில் கோபி அன்னான் காலமானார்.

தலைசிறந்த ராஜதந்திரியாகவும் நாட்டுப்பற்று மிக்கவரும் உலக தலைவர்களில் ஒருவருமான அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம்பர் 13-ம் தேதி கானாவில் அடக்கம் செய்யப்படும் என கானா நாட்டு அதிபர் நானா அக்குஃபோ-அடோ அறிவித்துள்ளார்.

Leave a comment