மேகாலயா கவர்னராக ததாகதா ராய் பதவியேற்பு!

413 0

மேகாலயா மாநிலத்தின் புதிய கவர்னராக மேற்கு வங்காளத்தை சேர்ந்த ததாகதா ராய் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். 

மேகாலயா கவர்னராக பதவி வகித்த கங்கா பிரசாத், சிக்கிம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து திரிபுரா மாநில முன்னாள் கவர்னராக இருந்த ததாகதா ராய் மேகாலயா கவர்னராக கடந்த 21-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், மேகாலயா மாநில தலைமை நீதிபதி முகமது யாகூப் மிர் முன்னிலையில் ததாகதா ராய் நேற்று கவர்னராக பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்சியில் அம்மாநில் முதல்வர் கன்ராட் சங்மா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

மேலும், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், ராணுவ அதிகாரிகளும் ததாகதா ராய் பதவியேற்பு நிகழ்சியில் பங்கேற்றனர்.

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய இவர் மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக கடந்த 2001-2006 ஆண்டு வரை பதவி வகித்தார். ததாகதா ராய் பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment