ரயில்வே ஊழியர்களின் சம்பள பிரச்சிணைக்கு 2 மாதத்தில் தீர்வு-மைத்திரிபால

207 0

ரயில் சேவை பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன 2 மாதம் கால அவகாசம் கோரியுள்ளதாக ரயில் ஒழுங்குபடுத்தல் சங்கச் செயலாளர் பி.எம்.பி.பீரிஸ் தெரிவித்தா

இதே வேளை இது தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரயில் பணியாளர்களின் வேதனம் உள்ளிட்ட பிரச்சினை தொடர்பில் ரயில்வே தொழிற்ச்சங்கம்  மற்றும்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்,  இயந்திர  கட்டுப்பாட்டாளர்கள்,  சாரதிகள்,  ஒழுங்குப்படுத்தல் பிரிவு  அதிகாரிகள்  உள்ளிட்டோர்  குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டனர்.

இம்மாதம் இடம் பெற்ற புகையிரத பணி புறக்கணிப்பைத் ரயில் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.   அதனை தொடர்ந்து இன்று  இரண்டாவது கலந்துரையாடல் இடம் பெற்றது என்றார்.

Leave a comment