க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டின் முதல் கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன.
இந்தப் பணிகள் 37 பாடசாலைகளில் அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பணிகளில் 527 உத்தியோகத்தர்களுடன் எண்ணாயிரத்து 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து கொள்வார்கள் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

