சிங்கப்பூர் உடன்படிக்கையினால் இலங்கை அழுக்கடையாது – ஹர்ஷ டி சில்வா

266 0

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிங்கப்பூரிலுள்ள குப்பை இலங்கைக்குள் கொண்டுவரப்பட மாட்டாதென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இரு நாடுகளதும் குப்பைகளை தீர்வையற்ற முறையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யலாமென உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குப்பைகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாதென்றும் அவர் கூறினார்.

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் சிங்கப்பூரின் குப்பைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருப்பதாகவும் குப்பைகளை குவிப்பதற்கான மையமாக இலங்கையை உருவாக்குவதே சிங்கப்பூரின் இலக்கு என்றும் சிரேஷ்ட வர்த்தக மற்றும் பொருளியல் நிபுணரான கொமி சேனாதீர ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

சிறிகொத்தவில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் மீது சேறு பூசுவதற்காக சிங்கப்பூரின் குப்பை குவிக்கும் மையமாக இலங்கை மாறப் போவதாக பந்துல குணவர்தன எம்.பி, போலிப் பிரசாரம் செய்து வருவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a comment