மஹிந்தானந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

335 0

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்தகமகேவுக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறையில் கலந்துகொவதற்காக வெளிநாடு செல்லவே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் மூலம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சராக இருந்த காலப்பகுதியில் முறையற்ற விதத்தில் பணத்தினை பயன்படுத்தி பொரளை பகுதியில் வீடொன்றை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு எதிராக வழக்கு தொடரப்படுகின்றது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் பிரதிவாதியின் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கான கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் மாதம் 9ம் திகதி முதல் 17ம் திகதி வரை மஹிந்தானந்த அலுத்தகமேவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கிய நீதிபதி குறித்த வழக்கு ஒக்டோபர் மாதம் 31ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்

Leave a comment