தனியார் வைத்தியசாலைகளின் விலை கட்டுப்பாட்டை அடுத்த வாரம் செய்வதாக சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சத்திரசிகிச்சை, ஆய்வுகூட பரிசோதனைகள், குழந்தை பிரசவம் உள்ளிட்ட 53 வகையான கட்டணங்கள் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வைத்தியசாலைகளின் விலை கட்டுப்பாடு தொடர்பான இறுதிப்பட்டியலை தயாரிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதுடன் எதிர்வரும் இரு தினங்களில் குறித்த அறிக்கை அமைச்சருக்கு கையளிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர், அந்த கட்டுப்பாட்டு விலை பட்டியல் வர்த்தமானி ஊடாக வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

