அத்துமீறி குடியேறிய சிங்களவர்களிற்கு காணி அனுமதிப்பத்திரங்கள்

16395 0

முல்லைத்தீவு – நாயாறிற்கு தெற்காக உள்ள கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறி குடியேறிய சிங்கள மக்களிற்கு நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகாரசபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள குடியேற்றவாசிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகார சபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.

மகாவலி அதிகார சபையின் இந்த திட்டமிட்ட நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்

1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வெளியேறிய பகுதிகளில் சிங்கள மக்கள் அடாத்தாக குடியேறியதாகவும் இவ்வாறு குடியேறிய மக்கள் அந்த பகுதிகளில் வீடுகளை அமைத்து வாழ்ந்ததுடன் அவற்றிற்கு காணி உரிமை பத்திரங்களை கோரியதாகவும் இப்பகுதியின் தமிழ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் நீதிமன்றம் அவர்கள் வெளியேற வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகாரசபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளமையானது சட்டவிரோத செயல் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Leave a comment