பெருந்தொகையான துப்பாக்கிகள், தோட்டக்களுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது

252 0
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம், விசேட அதிரடிப் படையினர் பிரிவு இணைந்து நேற்று (21) இரவு நுவரெலியா, மீபிலிமான, எல்க்ப்ளேன்ஸ் பிரதேசங்களில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் தோட்டா துப்பாக்கி ஒன்றும், பெருந்தொகையான தோட்டா மற்றும் வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் தோட்டாக்களை நிரப்புகின்ற மூலப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரமற்ற 12 தோட்டாக்களைக் கொண்ட துப்பாக்கி, 82 தோட்டக்கள், தோட்டாக்களை நிரப்புகின்ற பெருந்தொகையான மூலப்பொருட்கள், ரி 56 ரக தோட்டாக்கள் 08 மேலும் பல வெற்றுத்தோட்டாக்கள், வெடிப்பொருள், மாட்டுக் கொம்புகள் 03, வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஆடைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மீபிலிமான எல்க்ப்ளேன்ஸ் பகுதியைச் சேர்ந்த ஓபிரே பர்டினன்ஸ் (வயது – 36), எட்வட் கெலரன்ஸ் பர்டினன்ட்ஸ் (வயது – 38), ரேல்ஸ் ஷெடல் (வயது – 52) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் நாளை (23) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஹோர்டன்தென்ன பகுதியை அண்மித்த பிரதேசத்தில் சட்ட விரோதமாக வேட்டைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நீண்டகாலமாக மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்த சந்தேக நபர்கள் தேடுதலின் போது கைது செய்யப்பட்டனர்.

 

Leave a comment