பிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

294 0

இரண்டாம் உலகப் போரின் முடிவில் கொரியா வடகொரியா, தென்கொரியா என இரண்டாக உடைந்தது. அதனைத் தொடர்ந்து 1953-ல் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் போர் ஏற்பட்டது.

60 ஆண்களுக்குப் பிறகு இந்தப் போரில் பிரிந்து போன குடும்பங்கள் ஒன்றாக இணையும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவுக்குச் சென்று போரின்போது பிரிந்த தங்கள் உறவினர்களைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பு வடகொரியாவின் சுற்றுலாத் தலமான மவுண்ட் கும்காங் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.

இரு நாட்டுக் குடும்பங்களின் சந்திப்பில்  89 வயதான சோ சன் டு தனது மூத்த சகோதரி பற்றிக் கூறும்போது,  “எனக்கு நினைவிருக்கிறது நீ எவ்வளவு அழகாக இருப்பாய் என்று… உன்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

பல ஆண்டுகளாக பிரிந்திருந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அழுதனர். வரும் புதன்கிழமைவரை நடைபெறும் இந்தச் சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சந்தித்துப் பேச உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment