மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்கிறது

217 0

மன்னார் சதொச வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொண்ட சமயத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 54 வது தடவையாகவும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

கடந்த 10 ஆம் திகதி வெள்ளிகிழமை தொடக்கம் கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரை குறித்த வளாகத்தின் அகழ்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றும் திங்கட்கிழமை 20 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்கிழமை 54 ஆவது தடவையாகவும் இடம் பெற்று வருகின்றது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும்  தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.இதுவரை குறித்த வளாகத்தில் 72 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 66 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு 440 பைகளில் இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதி மன்ற  பாதுகப்பில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த வளாகத்தில் புதிதாக அடையாளப் படுத்தப்படும் மனித எச்சங்கள் மற்றும் புதிதாக இனம் காணப்படுகின்ற தடயப் பொருட்கள் சம்மந்தமாக இனி வரும் நாட்களில் தகவல் வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் இனி வரும் நாட்களில் ஊடகவியளார்கள் மனித புதைகுழிக்கு வருகை தந்து புகைபடம் மற்றும் ஓளிப்பதிவுகளை மோற்கொள்ளலாம் எனவும் ஆனால் தகவல் வழங்கும் விடயங்கள் பற்றி எதுவும் கூற முடியாத நிலை காணப்படுவதாகவும் விசேட சட்டவைத்திய நிபுணர் தொரிவித்துள்ளார்.

Leave a comment