போதைப்பொருள் துர்நடத்தை தொடர்பில் நேரடியாக அறிவிக்கவும்

189 0

போதைப்பொருள் துர்நடத்தை தொடர்பில் நேரடியாக அறிவிக்கும் அவசர தொலைபேசி இலக்க சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் போதைப்பொருள் பாவனை குறித்து அறிவிப்பதற்காக இந்த புதிய தொலைபேசி சேவை அமுல்படுத்தப்படும்.

இது தொடர்பான இணையத்தளமும் திறந்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, போதைப்பொருள் ஒழிப்புக் குழுவை அமுல்படுத்தும் விசேட செயற்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய இலக்கத்தின் கீழ் தனிப்பட்ட மற்றும் நம்பத்தகுந்த தகவல்களை அறிவிக்க முடியும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண, வட க்கு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகமும், களனிப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கான அனுசரணையை இலங்கை ரெலிகொம், மொபிற்றல் நிறுவனம் வழங்குகின்றது.

மாவட்டத்தில் 1,117 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இரகசியமாக வழங்கக்கூடிய தகவல்களுக்கு வினைத்திறனான பதிலளிப்பை வழங்கும் முறையான பொறிமுறையொன்றும் வகுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave a comment