மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இஇஜி சோதனையில் கண்விழி அசைவு இல்லை என்று விசாரணை ஆணையத்தில் மருத்துவர் அருள்செல்வன் வாக்குமூலம் அளித்துள்ளளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் அருள்செல்வன் மற்றும் ரேடியாலஜிஸ்ட் ரவிக்குமார் நேற்று ஆஜராகினர். அப்போது, ஜெயலலிதாவுக்கு நரம்பு பாதிப்பால் கையில் ஏற்பட்ட நடுக்கம் தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட இஇஜி சோதனையில் மூளையின் செயல்பாடு நரம்பு மற்றும் கண் விழி சுருக்கம் குறித்து பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் கண்விழி அசைவு மீண்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது என மருத்துவர் அருள்செல்வன் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து துக்ளக் இதழின் பதிப்பாளர் சுவாமிநாதனிடம் விசாரனை நடைபெற்றது.

