பசிபிக் பெருங்கடல் பிஜி தீவுகளுக்கு அருகில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் எல்லையில் 560 கிலோமீற்றர் ஆழத்தில் 8.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

