இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம்

219 0

ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்திவரும் இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று மீண்டும் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக்கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் இன்று காலை மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பெலண்டிங் நகரில் இருந்து மேற்கே-தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Leave a comment